பொன்னியின் தேசம்….!

நீ வந்தியத் தேவனோ? அருள்மொழி வர்மனா? இல்லை, கரிகாலனா? என்று கேட்டாள் அவள்….! நீ என்னை ஏற்றுக் கொள்ளும் வரையில், உன்னைச் சுற்றி வரும் வந்தியத்தேவன்….! எனக்கானவளாக நீ ஆனபின்பு சோழதேசம் உன்னை ஆளும் அருண்மொழி வர்மன் நான்….! என்னை விட்டு நீ சென்றால் தாடி வளர்த்த கரிகாலன் தான் என்றேன்! இது அந்தப் பொன்னியின் தேசமா….!

நான்….!

தனிமையின் சிறையில் தவிர்க்க முடியாக் காவலன் நான் ஆகினேன்! கவிதையின் படியால் காயங்கள் ஆறிடக் கவி ஒன்று தினம் பாடினேன்! வயல்வெளி நடுவிலும் – சிறு புல்வெளி நான் ஆகிறேன்! நிலவொளி வரும் வரையிலும் – பெறு கனவினைத் தினம் சுமக்கிறேன்! மனம் என்னும் மாய ஊஞ்சலில் மரக்கிளையும் நானே ஆகினேன்! கணம் எனும் நொடிப் பொழுதிலே காற்று வீசிட அசைந்தாடினேன்!

Design a site like this with WordPress.com
Get started