நீ
வந்தியத் தேவனோ?
அருள்மொழி வர்மனா?
இல்லை,
கரிகாலனா?
என்று கேட்டாள்
அவள்….!
நீ
என்னை
ஏற்றுக் கொள்ளும்
வரையில்,
உன்னைச்
சுற்றி வரும்
வந்தியத்தேவன்….!
எனக்கானவளாக
நீ
ஆனபின்பு
சோழதேசம்
உன்னை
ஆளும்
அருண்மொழி வர்மன்
நான்….!
என்னை விட்டு
நீ
சென்றால்
தாடி வளர்த்த
கரிகாலன் தான்
என்றேன்!
இது
அந்தப் பொன்னியின் தேசமா….!