
தனிமையின்
சிறையில்
தவிர்க்க முடியாக்
காவலன்
நான்
ஆகினேன்!
கவிதையின்
படியால்
காயங்கள் ஆறிடக்
கவி ஒன்று
தினம்
பாடினேன்!
வயல்வெளி
நடுவிலும் – சிறு
புல்வெளி
நான்
ஆகிறேன்!
நிலவொளி வரும்
வரையிலும் – பெறு
கனவினைத்
தினம்
சுமக்கிறேன்!
மனம்
என்னும்
மாய
ஊஞ்சலில்
மரக்கிளையும்
நானே
ஆகினேன்!
கணம் எனும்
நொடிப் பொழுதிலே
காற்று வீசிட
அசைந்தாடினேன்!